Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   929-ஏதேதோ வாழ்கையென்று  

ஏதேதோ வாழ்கையென்று எண்ணுகின்ற மனிதருக்கு
இதுதான் வாழ்கையென்று வாழ்ந்து சொன்ன இயேசுவே
என் வாழ்வை உன்னோடு இணைத்தருளும் இயேசுவே இயேசுவே
என்னை உன்னைப்போலவே மாற்றிவிடும் இயேசுவே இயேசுவே

பாஒகா உணவின் போது எமக்கு நல்மாதிரியாய்
பணிந்து நீ செய்த பணிவிடை நான் மறந்தேன்
அன்பு என்னவென்று சொல்லித்தாரும் இயேசுவே
என்னை உன் அன்பால் மாற்றி விடும் இயேசுவே
என் வாழ்வை உன்னோடு இணைத்தருளும் இயேசுவே இயேசுவே
என்னை உன்னைப்போலவே மாற்றிவிடும் இயேசுவே இயேசுவே

அழியும் பொருளைத் தேடி அலைந்து நான் திரிந்ததனால்
அமைதி நானிழந்தேன் அல்லலில் சோர்ந்து விட்டேன்
நிலையான வாழ்வைத் தேடி நேர்வழியில் நான் நடக்க
எந்தன் நிலைமைதனை மாற்றிவிடும் இயேசுவே
என் வாழ்வை உன்னோடு இணைத்தருளும் இயேசுவே இயேசுவே
என்னை உன்னைப்போலவே மாற்றிவிடும் இயேசுவே இயேசுவே

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்