928-எத்துணை நன்று எத்துணை நன்று |
எத்துணை நன்று எத்துணை நன்று அததனை பேரும் ஒன்றி வாழ்வது - 2 எத்துணை நன்று ஆ ஆ ஆ தந்தாய் நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி வேண்டுகிறேன் மண்ணோர் மொழிகளிலும் விண்ணோர் மொழிகளிலும் நான் பேசினும் அன்பு எனக்கில்லையேல் நான் ஒன்றுமில்லை ஒரு கொடி கிளையாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று - அந்த ஒரே திருச்சபையில் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று ஒரே குடும்பமாய் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று - இன்று ஒரே வித அழைப்பை நாம் பெற்றுக்கொண்டோம் எத்துணை நன்று ஒரே விருந்தினிலே சேர்ந்து கொண்டோமே எத்துணை நன்று - இன்று ஒரே அப்பத்தில் நாம் உணவுண்டோமே எத்துணை நன்று ஒரே கிண்ணத்தில் நாமிருக்கின்றோம் எத்துணை நன்று - இன்று ஒரே உடலாய் மாறி விட்டோமே எத்துணை நன்று புதியதோர் உலகம் கண்டிடுவோமே எத்துணை நன்று - அதில் புதியதோர் வாழ்வை அடைந்திடுவோமே எத்துணை நன்று பிரிவினை எல்லாம் தீர்த்திடுவோமே எத்துணை நன்று - இன்று இறைவனில் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே எத்துணை நன்று |