927-எத்தனை கோடி இடர் |
எத்தனை கோடி இடர் வந்தபோதும் இனி நான் பயப்படமாட்டேன் அத்தனை இடரும் அகன்று விடும் - என் இயேசு என்னைக் காப்பதனால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் எப்போதும் நான் தனிமையில் இல்லை இறைவன் என்னுடன் இருக்கின்றார் தப்பேது செய்தாலும் தள்ளி விடார் தவறேது செய்தாலும் வெறுக்கமாட்டார் எனக்காக உயிரையும் தந்து விட்டார் தேற்றிட ஆவியும் அனுப்பியுள்ளார் என்னை அழிவுற விடமாட்டார் எரியும் நெருப்புக்கு அனுப்பமாட்டார் |