Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   926-உன் அருள் தானே துணை  


உன் அருள் தானே துணை
என்கரம் பிடித்து வழி தொடர்ந்தாய் தலைவா
வல்லவர் நீயே நல்லவர் நீயே காப்பவர் நீதானே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
வாழ்வே நீதானே

உள்ளம் பொங்குதே நன்றி சொல்லுதே
நன்றி நன்றி இறைவா
இதயம் நிறையுதே மகிழ்ந்து பாடுதே
நன்றி நன்றி தலைவா

வாழும் வாழ்வு நீதானே
நன்றி நன்றி இறைவா
எல்லாம் எமக்குத் தந்தாயே
நன்றிகள் எம் தலைவா
உடலாய் வந்ததும் நீர்தானே
நன்றி நன்றி இறைவா
உயிரை எமக்குத் தந்தாயே
நன்றிகள் எம் தலைவா
வானும் நிலவும் காண்பவை எல்லாம்
வந்தது இன்று உம்மாலே
உந்தன் அன்பில் என்றும் வாழும்
வரமே வந்ததும் உம்மாலே

பாசம் காட்டும் தெய்வம் நீ
நன்றி நன்றி இறைவா
நேசம் தன்னைப் பொழிபவரே
நன்றிகள் எம் தலைவா
ஆவியை கொடையாய் தந்தவரே
நன்றி நன்றி இறைவா
ஆக்கும் சக்தியும் நீர்தானே
நன்றிகள் எம் தலைவா
மண்ணில் எம்மை மாண்புறச் செய்யும்
மன்னவன் இங்கு நீர்தானே
உந்தன் அன்பில் என்றும் வாழும்
வரமே தந்ததும் நீர்தானே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்