925-உள்ளம் வந்தீர் உறவு தந்தீர் |
உள்ளம் வந்தீர் உறவு தந்தீர் இயேசுவே உமக்கே நன்றி பூக்கள் (2) ஒளியினைத் தந்தீர் எங்கள் வாழ்வில் மனிதத்தின் மாண்பைக் கண்டோம் உம்மில் (2) நன்றி பாடிடுவோம் நன்றி பாடிடுவோம் - 2 ஏழைப் பெண்ணின் காணிக்கை போல எம்மைத் தந்தோம் ஏற்றாய் நன்றி (2) வார்த்தையைக் கேட்டோம் மரியாள் போல பாதத்தில் அமர்ந்தோம் அர்த்தங்கள் தந்தாய் சிறுதுளி நீரே முத்தாய் மாறும் இறைவா முத்தென மாற்றினாய் என்னை (2) நன்றி பாடிடுவோம் நன்றி பாடிடுவோம் - 2 தொழு நோயாளன் உடல் நலம் அடைந்தான் தொழுதிட மீண்டும் வந்ததும் மகிழ்ந்தீர் (2) ஆலமரத்தின் விழுது போல ஆயிரம் நன்மைகள் அடைந்தோம் நன்றி அன்பை பிறருக்கு உனைப் போல் வழங்க செல்வோம் உலகிற்கு இது எம் நன்றி (2) நன்றி பாடிடுவோம் நன்றி பாடிடுவோம் - 2 |