Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   924-உயிரோடு கலந்து உறவான உனக்கு  

உயிரோடு கலந்து உறவான உனக்கு - நன்றி நன்றி
உலகினில் உறவுகள் அளித்திட்ட நிலைக்கு - நன்றி நன்றி
மனிதமும் புனிதமும் உறவென்ற மொழிக்கு - நன்றி நன்றி
உறவாலே வாழ்விக்கும் அமுதான கொடைக்கு - நன்றி நன்றி
நன்றியின் பாடல் உறவின் பாடல்
நன்மை கூறல் வாழ்வின் தேடல் - 4

கவி பாடும் உலகைப் படைத்திட்ட இறைக்கு - நன்றி நன்றி
கட்டவும் நடவும் நீ தந்த பணிக்கு - நன்றி நன்றி
கருத்தையும் செயலையும் புதுப்பிக்கும் நெறிக்கு - நன்றி நன்றி
காலமும் உடன் வந்து உயிரூட்டும் தயைக்கு - நன்றி நன்றி
நன்றியின் பாடல் உறவின் பாடல்
நன்மை கூறல் வாழ்வின் தேடல் - 4

வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற பணிக்கு - நன்றி நன்றி
வளங்களும் நலன்களும் நீதானே எமக்கு - நன்றி நன்றி
அம்மையும் அப்பனும் ஆனாயே புவிக்கு - நன்றி நன்றி
அன்பினில் அர்ப்பணம் வளர்த்தாயே அதற்கு - நன்றி நன்றி
நன்றியின் பாடல் உறவின் பாடல்
நன்மை கூரல் வாழ்வின் தேடல் - 4


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்