Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   923-உலகிற்கு ஓளியாய் உயிருக்கு வழியாய்  
உலகிற்கு ஓளியாய் உயிருக்கு வழியாய்
துலங்கிடும் உமக்கே இறைவா
நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம்

யேசுவின் குரலை இதயத்தில் கொண்டு
இணையில்லாப் பலியில் இறைவனை உண்டு ;
சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில்
நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்

உண்மை வழியை உலகிற்குக் காட்ட
உலகத்தை அன்பால் ஒன்றாய் திரட்ட
அக இருள் அகற்றி இறையருள் புகுத்த
அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்