Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   922-உம்மைப் போற்றி புகழுகின்றோம்  

உம்மைப் போற்றி புகழுகின்றோம்
உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
நன்றிகூறி மகிழுகின்றோம் - 2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2

வல்லவரே நல்லவரே வானம்
வையம் படைத்தவரே - 2
வாழ்வுதர வந்தவரே எம்மை - 2
வாழவைத்துக் காப்பவரே - 2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2

நேற்றும் இன்றும் மாறாதவரே - நேசப்
பிதாவிலே வாழ்ந்தவரே
நேசம் காட்டவந்தவரே எம்மை
நேசித்து வாழ்பவரே - 2
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2

ஆதிமுதல் வாழ்பவரே - ஆதி
அந்தமில்லா இருப்பவரே - 2
ஆடுமேய்க்க வந்தவரே - புதிய - 2
ஆதாமாய் இருந்தவரே
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்