Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   920-இன்று என் வாழ்விலே பொன்னாள்  
இன்று என் வாழ்விலே பொன்னாள்
கண்டேன் நான் கண்டிலா பேறு
நன்றி என் தேவனே கோடி
தந்தேன் நான் தாள் மலர் சூடி ஆ...

அன்னை தன் உதரம் உதித்திட்ட நேரம்
தந்தை நீர் என்னை தேர்ந்தெடுத்தீர்
அன்பினை பாலாய் அவள் தந்த வேளை
என் பணி எழுதிவைத்தீர் (2)
இந்நாள் வரை என்னைக் கண்போல காத்தீர்
இறைவா உன் கருணைக்கு விளக்கம் நீர் ஆனீர் (2)

அகிலத்தில் எனது பயணம் தான் நீள
விந்தைகள் பல நீர் புரிந்து நின்றீர்
இரவிலும் எல்லா பகலிலும் நீரே
நட்போடென் வழிநடந்தீர் (2)
இயலாமையில் உன் பலம் நீர் அளித்தீர்
தேவா என் வாழ்க்கையில் நிறைவும் நீர் ஆனீர் (2)









 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்