Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   918-இறைவனைப் புகழ்ந்து பாடுவேன்  
இறைவனைப் புகழ்ந்து பாடுவேன்
இறைவனில் மகிழ்ந்து ஆடுவேன்
இயேசுவை எந்நாளும் புகழ்ந்து பாடுவேன் - நான்
இயேசுவை எந்நாளும் புகழ்ந்து பாடுவேன் (2)
என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் கோடியே
எந்நாளும் நினைத்து நினைத்து
பொன்னாலும் போற்றுவேன் (2)

தாயின் கருவிலே தரிக்கும் முன்னமே
தயவுடன் கருணைக்கண் நோக்கினீர் (2)
கழுகைப் போல உம் சிறகில் சுமந்தீர் - உம்
கனிவுள்ள கரங்களிலே பொறித்தீர்
இறைவா இறைவா என்ன நன்றி சொல்லுவேன்
என் வாழ்வில்...

கார்முகில் போல கவலை சூழ்கையில்
மார்போடு எனை அணைத்துக்கொண்டீர் (2)
மகிழ்ச்சியின் தைலத்தைப் பூசினீர் - உம்
மகிமையில் எனக்குப் பங்கு தந்தீர்
இறைவா இறைவா என்ன நன்றி சொல்லுவேன்
என் வாழ்வில்...


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்