Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   917-இறைவன் படைத்த நாளிது  
இறைவன் படைத்த நாளிது
நன்றி நன்றி பாடுவோம்
இதயம் மகிழும் நாளிது
நன்றி நன்றி பாடுவோம்
நன்றி இறைவா நன்றி இறைவா - 2

வானம் பூமி யாவுமே நன்றி கூறட்டும்
வாழும் உயிர்கள் யேசுவை வணங்கி மகிழட்டும்
இதயம் இன்று இனிய கீதம் பாடட்டும்
இறைவன் இயேசு நம்மை இன்று காப்பதால்

கவலை எல்லாம் மறைந்தது கலக்கமில்லையே
காலமெல்லாம் கர்த்தர் யேசு நம்மோடு உள்ளார்
புதிய வானம் புதிய பூமி படைத்திட
புதிய பயணம் புவியில் இன்று தொடருவோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்