916-இருகரம் குவித்தேன் |
இருகரம் குவித்தேன் இனிதே உரைத்தேன் நன்றி நன்றி நன்றி என்றும் - என் நண்பர் இயேசுவுக்கு ஆகா நன்றி நன்றி நன்றி என் அன்பர் இயேசுவுக்கு ஆ...கா...கா நன்றி நன்றி நன்றி என் அன்பர் இயேசுவுக்கு பசுமை வெளியில் எனை நடத்தி கண்ணின் இமை போலக் காத்து தம் கரத்தில் இறுக அணைத்தே காத்திடும் இயேசுவுக்கு எனை முழுதும் கையளித்து என்றுமே பாடிடுவேன் ஆகா நன்றி நன்றி நன்றி... கண்ணயர்ந்து உறங்கும் போது கண்விழித்து அருகில் அமர்ந்து நாள் முழுதும் கரம் பிடித்து வழிகாட்டும் தேவனுக்கு அவர் புகழைப் பறைசாற்றி என்றுமே பாடிடுவேன் ஆயா நன்றி நன்றி நன்றி... |