Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   913-இயேசுவே எம் இதயத்திலே  
இயேசுவே எம் இதயத்திலே - நீர்
எழுந்து வந்தீரே
எந்தன் உள்ளம் மகிழ்ந்து - நாளும்
நன்றி சொல்லி நாம் பாடுவோம் (2)

பாடி மகிழ்ந்திடுவோம் - தினம்
போற்றிப் புகழ்ந்திடுவோம்
தேடி வந்த உம்மை வாழ்த்தி வணங்கிடுவோம் (2)
உணவின் உருவில் அருளின் வடிவில்
உள்ளத்தில் உறைபவரே
அருகிலே அமர்ந்து அன்பையே பொழிந்து
ஆனந்தம் அளிப்பவரே (2)

குழலுடன் யாழிசைத்து - உம்
புகழினைப் பாடிடுவோம்
குயிலதன் குரலெடுத்து - உம்
திருப்பெயர் போற்றிடுவோம் (2)
தந்தையின் அன்பும் தாயின் அரணும்
எமக்கெல்லாம் நீர் தானய்யா
சிந்தை மகிழ்ந்து உம்மிலே என்றும்
சங்கமமாகிடுவோம் (2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்