911-இயேசு கிறிஸ்து ஆண்டவர் |
இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் என்றும் இருப்பவர் இன்னல் நீக்கி என்னை என்றும் காப்பவர் ஆனந்தம் அல்லேலுயா - 2 இறைவன் இயேசு என்றும் என்னில் இருப்பதால் பாவக்கறைகள் நிறைந்த எந்தன் உள்ளத்தை பரமன் இயேசு குருதி சிந்திக் கழுவினார் அமைதி இன்றி அலைந்த எந்தன் மனதினை ஆவி அனுப்பி அன்பு பொழிந்து மாற்றினார் இரவும் பகலும் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன் இயேசு அருளால் இனி எனக்கு குறையில்லை இன்பம் துன்பம் எது வந்தாலும் பயமில்லை இயேசு எனது இறைவனாக இருப்பதால் |