910-இந்நாள் வரையில் காத்த உன் |
இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு நன்றி என் இறைவா இனி வரும் நாளும் இந்நாளாக இறங்கி அருள் தருவாய் - இறைவா தாயின் கருவில் தரிக்குமுன்னே நீயும் என்னை நினைத்தாய் அழைத்தாய் தனது குழந்தையை தாயே மறப்பினும் மறவாதென்னை மகிழ்ந்து காக்கின்றாய் என்னென்ன திறமைகள் எனக்கு தந்துள்ளாய் படைப்பு அனைத்தும் அறிய பணித்தாய் ஒவ்வொரு திறமையும் நீ தரும் பிச்சைதான் உணர்ந்து வாழவே உதவி செய்குவாய் |