Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   909-இந்நாள்வரை என்னைக் காத்த  
இந்நாள்வரை என்னைக் காத்த
அன்பின் தெய்வமே உன் உயிரான
அருட் துணையை வியந்து பாடுவேன் (2)
நன்றி நன்றி நன்றி நெஞ்சம் சொல்லும் நன்றி - 2
நன்றி நன்றி நன்றி என்றும் நன்றி - 2

உளம் சோர்ந்து போன போது
அருகில் இருந்து நடந்தாய்
உடல் சோர்ந்து தவித்த போது
வார்த்தை தந்து வளர்த்தாய் (2)
புனிதப் பாதையில் நான் தினமும் நடப்பேன்
புரட்சிப் பாதையில் நான் நல் வழி காண்பேன் (2)
அன்னையானவா நல் தந்தையானவா
நன்றி வாழ்வுக்கும் நன்றி
வளங்களுக்கும் நன்றி

உறவு தேடி தவித்த போது
நண்பனாக வந்தாய்
அமைதி தேடி அலைந்த போது
இறையமைதி தந்தாய் (2)
இயேசு பாதையில் நான் வலிமை பெறுவேன்
இறையாட்சி தேடலில் நான் புதுயுகம் படைப்பேன் (2)
அன்னையானவா நல் தந்தையானவா
நன்றி வாழ்வுக்கும் நன்றி
வளங்களுக்கும் நன்றி



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்