907-இதழால் நன்றி சொன்னால் |
இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி - மனத் தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி சிலுவைக் கொடியேந்தி ஜெகத்தை மீட்டுயிர்த்து சிலுவைப் பலன் யாவும் நமக்கே ஈந்தவர்க்கே உலகை உருவாக்கி உண்மையின் வாழ்வளித்து தன்னையே பலியாக்கி தந்திடும் இறைவனுக்கே ஆறுதல் மொழி கூறி அன்பினில் வழி காட்டி உயிர் தரும் உண்மையிலே உறவுகள் தருபவர்க்கே |