Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   906-இதயம் சொல்லும் கவிதையிலே  
இதயம் சொல்லும் கவிதையிலே
இறைவா உனைப் பாடுகிறேன்
இனிய உந்தன் நினைவினிலே
இனிமை நான் காணுகிறேன்
அன்பின் அணைப்பில் எனைக் காக்கும்
இறைவா நன்றி என் இதய நன்றி

எனது வாழ்வினில்; அச்சம் இல்லையே
இயேசு பாதையில் நான் பயணம் சென்றால்
வாழ்வின் சுமைகள் வருத்தும் தனிமை
ஏக்கங்கள் எல்லாம் - இனி
என்றுமில்லை எந்தன் வாழ்விலே

பூமி எங்குமே சோக கீதமே
அமைதி தேடியே நான் அலைந்து திரிகிறேன்
துன்ப துயர்கள் முறிந்த உறவு
தாக்கங்கள் அனைத்தும் - இனி
என்னில் இல்லை உன்னில் முழுமையே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்