Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   905-இதய ராகம் கோடி  


இதய ராகம் கோடி நன்றி பாடும்
இதய ராஐன் புகழும் நெஞ்சில் கூடும்
உதயமாகும் இறைவன் ஆசி எங்கும்
இல்லம் தன்னில் அருளும் அங்கு தங்கும்

இனிமை தரும் கல்வி தரும் காலம்
இறையவனே உன் அருளின் கோலம்
இறைவனே என் நாதனே
நலம் பல தினம் பொழிந்திடு
தேவனே ராஜனே
உனதருள் தர எமதிருள் அற ஆசி தா
நாதனே அன்பனே
எமை நடத்திட அருள் கொடுத்திட நாடி வா

காலம் தோன்றும் ஞாலம் மீது எம்மை
காத்து வந்த எம் இறைவா நன்றி
இறைவனே என் நாதனே
நலம் பல தினம் பொழிந்திடு
தேவனே ராஜனே
உனதருள் தர எமதிருள் அற ஆசி தா
நாதனே அன்பனே
எமை நடத்திட அருள் கொடுத்திட நாடி வா

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்