901-ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம் |
ஆண்டவர்க்கு நன்றி கூறுவோம் நன்றி உள்ளத்தோடு பாடுவோம் நன்றியுள்ள மக்களையே ஆண்டவர் நலன்களாலே என்றும் நிரப்புவார் உன்னைப் படைத்து உன்னைக் காக்கின்றார் உணவும் உடையும் கொடுத்துக் காக்கின்றார் வரும் போதும் காக்கின்றார் போகும் போதும் காக்கின்றார் இன்றும் என்றும் உன்னைக் காக்கின்றார் நம்பினோரைக் கைவிடாதவர் அண்டினோரை அரவணைப்பவர் நோய்பிணியை நீக்குபவர் அல்லல்களை அகற்றுபவர் அன்பு கொண்ட தெய்வமே அவர் |