Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   900-ஆயிரம் நன்றி சொல்வேன்  
ஆயிரம் நன்றி சொல்வேன் - உனக்குப்பாயிரம் பாடிடுவேன்
நேரிலே வந்தென்னை ஆண்டுகொண்டோனே
பாரெல்லாம் போற்றிடுவேன் - உன்நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்
இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இயேசுவே (4)

பாவியாய் இருந்தேன் பாருலகில் நானே
பேடி என்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயே
வேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயே
மாலையாய் என்வாழ்வைச் சூடுவேன் உமக்கே சூடுவேன் உமக்கே

காலை மாலையில் கர்த்தர் இயேசுவின்
காலடி அமர்ந்திடுவேன் - வேலை
ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனை தணித்திடுவேன் . வேறில்லைத்
தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்