899-அழகிய கவிதையில் பாடிடுவேன் |
அழகிய கவிதையில் பாடிடுவேன் அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன் அறிவிலி எனையே அவர் நினைத்தார் ஆற்றல் அனைத்தும் எனக்களித்தார் - 2 எரிந்திடும் துயரில் எனைக் காத்தார் எனவே அவர் என் ஆண்டவரே துன்பச் சூழல்கள் சூழ்கையிலே துயரக் கறைகள் படர்கையிலே - 2 அன்பின் சுரத்தால் அரவணைத்தார் ஆகவே அவர் என் ஆண்டவரே |