Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   1007-வெள்ளிச் சுரங்களின்  


வெள்ளிச் சுரங்களின் அலைகளிலே
துள்ளி வருகின்ற சந்தங்களே
உள்ளம் கனிந்த எம் நன்றியினை
சொல்லிப் பாடுங்களே - எந்தன் தேவனுக்கே (2)

கருவினில் என்னை அறிந்தவன்
கண்மணி போல் என்னை வளர்த்தவன் - 2
அறுவடை மிகுந்த பணியிலே
அடியேன் என்னை அழைத்தவன் - 2
அருகிலிருந்து ஆற்றல் பொழிந்து
நிறை ஆனந்தம் தருபவன் - 2
அந்த நல்ல தேவனுக்கே எம்
நன்றியைக் கூறுங்களே. - 2

கொடுப்பதில் இன்பம் வைத்தவன்
தன்னையே உண்ணக் கொடுத்தவன் - 2
படிப்பினைகள் செல்லியவன்
சொன்னபடியே வாழ்ந்தவன் - 2
இடுக்கண்ணுற்று வீழும்போது
ஏனக்காய் உயிர் கொடுப்பவன் - 2
அந்த நல்ல தேவனுக்கே எம்
நன்றியைக் கூறுங்களே.- 2





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்