1006-வந்தனைகள் புரிந்தோம் தேவா |
வந்தனைகள் புரிந்தோம் தேவா வந்தனைகள் புரிந்தோம் வரம் வேறு ஏதும் கேட்டிலோம் இறைவா வந்தனை ஏற்றருளே எமது உழைப்பும் ஓய்வும் உணர்வும் உமக்கு அதிமிக மகிமை தரவே மனம் உடல் யாவும் அர்ப்பணம் செய்தோம் உந்தன் சேவையிலே இறைவா வந்தனை ஏற்றருளே பரத்தைப் படைத்த பிதாவுக்கு மகிமை பார்தனை மீட்ட சுதனார்க்கும் மகிமை அனைத்தையும் அர்ச்சிக்கும் ஆவிக்கும் மகிமை தந்தோம் என்றென்றுமே இறைவா வந்தனை ஏற்றருளே |