Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   1005-மனிதம் மலர்ந்திட வேண்டும்  
மனிதம் மலர்ந்திட வேண்டும் - மனித
மாண்புகள் உயர்ந்திட வேண்டும் (2)
இறைமையின் சாயலே மனிதம் மனிதம்
அதன் நிறைவினில் இறைமை மலருமே மலருமே

உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேற்றுமை ஒழிந்தால்
மனிதம் நிறைவாகும்
சமத்துவம் மலரும் சரித்திரம் படைத்தால்
இறைமை புலனாகும் (2)
ஏழ்மையும் துன்பமும் இங்குண்டு
எழுவோம் இணைவோம் அன்பு கொண்டு (2)
துன்பத்தில் துணையாய் இன்பத்தில் இணையாய்
மனிதம் மலர்ந்திட மனம் திறப்போம் - 2

வறுமையில் வாழ்வோர் விழிநீர் துடைத்தால்
மனிதம் நிறைவாகும்
இறைமொழி கேட்டு இருப்பதைப் பகிர்ந்தால்
இறைமை புலனாகும் (2)
உண்மையும் நீதியும் ஒளிரட்டுமே
பரிவும் பாசமும் மிளிரட்டுமே (2)
வேதங்கள் எல்லாம் வீதியில் வந்து
மனிதம் மலர்ந்திட மாறட்டுமே - 2




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்