1004-மகிழ்வோம் மகிழ்வோம் |
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாகினார் (2) இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2) ஆ.....ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே (2) இந்தப்... சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார் தூரம் போயினும் கண்டுகொண்டார் (2) தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் (2) ஆ.....ஆனந்தமே... எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் (2) என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரை காத்துக்கொள்வேன் (2) ஆ.....ஆனந்தமே... |