Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   1003-மலர் சொல்லும் நன்றி  


மலர் சொல்லும் நன்றி தேனாகுமே
வான் சொல்லும் நன்றி மழையாகுமே
நிலம் சொல்லும் நன்றி பயிராகுமே
நீர் சொல்லும் நன்றி வளமாகுமே
நீ சொல்லும் நன்றி என்ன - நெஞ்சே
நீ சொல்லும் நன்றி என்ன

ஆண்டவர் வாழும் ஆலயமாவேன்
அன்பு என்னும் தீபம் ஏற்றி வைப்பேன்
யான் எனதென்னும் ஆணவம் வெல்வேன்
யாவர்க்கும் நற்செய்தி சொல்வேன்

மரம் சொல்லும் நன்றி நிழலாகுமே
மணி சொல்லும் நன்றி ஒலியாகுமே
கரம் சொல்லும் நன்றி உழைப்பாகுமே
கடல் சொல்லும் நன்றி அலையாகுமே

வல்லவர் செய்யும் நன்மைகளெல்லாம்
வாஞ்சையாய் எண்ணிப் போற்றி நிற்பேன்
கல்லிலே சிற்பம் செருக்குதல் போல்
களங்கமகற்றி தூய்மை கொள்வேன்





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்