1002-பூவுலகெங்கும் அழகழகான |
பூவுலகெங்கும் அழகழகான மகிழ்வினைத் தந்தாய் நன்றி உழைத்திட களித்திட ஓய்ந்திட அமர்ந்திட எல்லாம் தந்தாய் நன்றி உணவளித்தாய் உடைகொடுத்தாய் வாழுமிடம் எமக்களித்தாய் கடும் இருள்கூட எனில் படர்ந்தாலும் இருட்டாய் இல்லையே நன்றி சுடும் வெயில்கூட அனல் உமிழ்ந்தாலும் குளிராய் தோன்றுதே நன்றி நடப்பதை படுப்பதை அறிந்தவரே என் வழி தெரிந்தவரே என் வாய் பேச திறக்குமுன்னே என் சொல் அறிந்தவரே உணவளித்தாய் உடைகொடுத்தாய் வாழுமிடம் எமக்களித்தாய் கடும் செருக்கோடு பகை சூழ்ந்தாலும் பயமாய் இல்லையே நன்றி உடல் புண்ணாய் மாறி உறுப்பிழந்தாலும் தவிப்பாய் இல்லையே நன்றி நீதியின் ஆண்டவர் எனைத் தேர்ந்தார் கைவிட விழைவாரா சாந்தமே சாந்தமே அவர் நெஞ்சில் காயங்கள் விழைவாரா உணவளித்தாய் உடைகொடுத்தாய் வாழுமிடம் எமக்களித்தாய் |