திருவிருந்துப்பாடல்கள் | என் தெய்வம் என்னுள் வரும் |
ச........சரிரிககிரிசசநிமபதநிதச பதகரிச கநிச கரிச சரிகம கரிச சரி......... பமகமரி பமகமரி கரிச கரிச மகரி மகரி பமக பமக நிதப நிதப பத பத பத பத பத கரிச என் தெய்வம் என்னுள் வரும் நேரமிது இதயம் திறவாயோ தன் வாழ்வை பகிர்ந்திடும் தருணமிது தாகம் கொள்வாயோ நம்மோடு அமர்வார் நம் குரல் கேட்பார் சுமைகளல்லாம் சுமப்பார் கவலைகள் அறிவார் கரம் பிடித்திடுவார் கண்ணீரெல்லாம் துடைப்பார்- நம் கண்ணீரெல்லாம் துடைப்பார் அன்பின் நிறைவை அகிலம் பெறவே இயேசு மனிதரானார் பாவிகள் நாமும் வாழ்வை பெறவே தானே உணவானார் இதை அவர் நினைவாக செய்கின்றோம் நிறை வாழ்வினிலே நுழைகின்றோம் உடைபடும் உணவாய் உலகினில் வாழ உணவாய் வருகின்றார் - நம் உள்ளம் நிறைகின்றார் உலகில் வாழும் மனிதரைத் தேடி இயேசு நடந்து சென்றார் இதயங்கள் எழுப்பும் குரல்களின் உணர்வை உள்ளத்தில் புரிந்து கொண்டார் புவி மாந்தரைக் காக்கும் நோக்கினிலே பரிவென்னும் பாதையில் நடந்து சென்றார் பாரினில் நாமும் பரிவாய் வாழ்வோம் இயேசுவின் சாட்சிகளாய் - நம் இயேசுவின் சாட்சிகளாய் |