Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள்  விருந்திது அன்பின் விருந்திது  
ஆ...ஆ.ஆ...ஆ..ஆ.ஆ
விருந்திது அன்பின் விருந்திது
விருந்திது உறவின் விருந்திது (2)
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
பண்பாடி விருந்துண்போம் (2)

ஆ...ஆ.ஆ...ஆ..ஆ.ஆ...ஆ.ஆ...ஆ..ஆ.
உடலும் உயிரும் என என்னோடு வருவாய்
உறவினில் நீ மலர்வாய் ஆ...ஆ...ஆ
வழியும் ஒளியும் என என்னோடு இருப்பாய்
வாழ்வினில் துணை வருவாய்
உன்னோடு நானும் உணவாகுவேன்
என்னோடு நீயும் உறவாடுவாய்
ஆயனாய் இருந்திடுவாய் - என்னை
ஆவியால் நிரப்பிடுவாய்

ஆ...ஆ.ஆ...ஆ..ஆ.ஆ...ஆ.ஆ...ஆ..ஆ.
ஜெபமும் ஜெயமும் என என்றென்றும் வாழ்வேன்
உணவாய் நீ வருவாய் ஆ...ஆ...ஆ
இரவும் பகலும் என என்னோடு இருப்பாய்
பயமின்றி நான் வாழ்வேன்
உன் நாமம் என்றும் நான் பாடுவேன்
என்னோடு நீயும் இளைப்பாறுவாய்
ஆயனாய் இருந்திடுவாய் என்னை
ஆவியால் நிரப்பிடுவாய்







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்