திருவிருந்துப்பாடல்கள் | வாழ்வு தரும் உணவே |
வாழ்வு தரும் உணவே வாழும் எங்கள் உறவே வானத்தினின்று இறங்கிய உணவே உனக்காக எந்தன் உள்ளம் ஏங்குதே உன் தெய்வீக திருவிருந்தை நாடுதே வாரும் வாரும் இயேசுவே என்னில் வாருமே வாழும் எந்தன் நெஞ்சிலே அமைதி தாருமே வலுவூட்டும் உணவு இங்கு பலவுண்டு நீ உயிரூட்டும் பேருணவு நீ மட்டும் தானே என் வழியாய் இன்றி மீட்பு இல்லை என்ற விண்ணகத்தில் உறையும் தேவதந்தையே என் ஆண்டவன் தேவனே சிரம் தாழ்ந்து வணங்கினேன் என் தசையை உண்போர்க்கு நிறைவுண்டு என் கிண்ணத்திலே பருகுவோர்க்கு நிலைவாழ்வும் உண்டு எனத் தேற்றும் இயேசுவே உம்மை ஏற்றுக் கொண்டேன் நீர் விரும்புகின்ற மகனாய் எனை மாற்றுமே எனத் தேற்றும் இயேசுவே உம்மை ஏற்றுக் கொண்டேன் நீர் விரும்புகின்ற மகளாய் எனை மாற்றுமே என் ஆண்டவன் தேவனே சிரம் தாழ்ந்து வணங்கினேன் வாரும் வாரும் இயேசுவே என்னில் வாருமே வாழும் எந்தன் நெஞ்சிலே அமைதி தாருமே |