திருவிருந்துப்பாடல்கள் | உயிரே உயிரே உருகி |
உயிரே உயிரே உருகி நின்றேன் உயிரன்பே ஒரு வரம் வேண்டி நின்றேன் இயேசுவே இறைவா என் தலைவா என் திருமுக தரிசனம் தர வருவாய் நான் தேடும் உன் ஒளி வரமல்லவா நீ சொல்லாத சொல்லும் சுவைத்திடுமோ இரவுக்கும் பகலுக்கும் தூரமில்லை - என் இன்பமும் துன்பமும் பாரமில்லை உறவுக்கும் பிரிவுக்கும் காலமுண்டு - உன் அன்புக்கும் அருளுக்கும் எல்லை இல்லை ஆண்டவரே என் வலப்புறம் நீர் அமைதி அளிப்பீர் கண்ணீர் யாவும் துடைப்பீர் உன்னில் நான் என்னில் நீ இனி நிரந்தரமே என்னில் நீ உன்னில் நான் உயிர் கலந்தாளுமே கடலுக்கும் அலைக்கும் மோதல் உண்டு - விழி அசைவினில் இமைகளின் கூடல் உண்டு காக்கும் உன் கரங்களில் பரிவும் உண்டு - ஒரு கொடுக்கும் உன் கண்டிப்பில் கனிவுமுண்டு நான் பாடும் பாடல் உனதல்லவா இசையே மகிழ்வே உன்னில் என்றும் நிறைவே தாயாய் நீ சேயாய் நான் இது புது உறவே சேயாய் நான் தாயாய் நீ உயிர் உறவாடுமே |