திருவிருந்துப்பாடல்கள் | உறவாக வா உணவாக வா |
உறவாக வா உணவாக வா உயிரோடு நிறைவாக வா - என் வாழ்வெல்லாம் துணையாக வா உண்மை நீதி உலகில் நாளும் மலர மனதில் அமைதி மகிழ்வு என்றும் பெருக. பொருட்செல்வங்கள் எந்தன் குறை தீர்க்குமா உன் அருட்செல்வம் என்றென்றும் நிலையாகுமே உளம் நைந்திடும் பாச பந்தங்களே உம் நிலையான உறவொன்று எனை தேற்றுமே குடிசையிலே அவதரித்த அவனியின் மன்னவரே பாரில் நலிந்தோர்க்கு அமைதியினை நல்கிட வந்தவரே பரிவுள்ளம் கொண்டு எளியோரை மீட்க மகனாக மனுவாகினேன் மரியின் மகனாக உருவாகினேன் உண்மை நீதி உலகில் நாளும் மலர மனதில் அமைதி மகிழ்வு என்றும் பெருக. விழி நீரையும் வாழ்வின் வலியாவையும் துயர் நீக்கும் துணையாளன் எனில் வாருமே இருள் வாழ்வையும் பாவக்கறை யாவையும் நலமாக்கும் நாதா உன் அருள் தாருமே குறைகளையும் நிறைவாக்கி தேற்றிட வல்லவரே வாழ்வில் அருளூட்டும் உணவாக உறவாய் வந்தவரே பரிவுள்ளம் கொண்டு எழியோரை மீட்க மகனாக மனுவாகினேன் மரியின் மகனாக உருவாகினேன் உண்மை நீதி உலகில் நாளும் மலர மனதில் அமைதி மகிழ்வு என்றும் பெருக |