உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் |
ஆ ஆ ஆ ஆ ஆ உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் என்நெஞ்சம் இனிதாக பாடும் கார்மேகம் காணும் மயிலாக நானும் என்நாவில் ஆனந்த ராகம் உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம் உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம் - 2 எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண விளக்கோடு உனை தேடினேன் விழியிரண்டும் ஏங்க நேரங்கள் நீள நானிங்கு உளம் வாடினேன் - 2 வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ ஆ ஆ ஆ வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் உனக்காக நான் வாழ்கிறேன் உன் அன்பில் ஒன்றாகிறேன் பலவண்ண பட்டோடும் ஒபிர்நாட்டு பொன்னோடும் நான் என்னை அழகாக்கினேன் மன்னா நீ காண மகிழ்வென்னை ஆழ உனக்காக யாழ் மீட்டினேன் - 2 வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ ஆ ஆ ஆஆ வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் உம்மாண்பு நிறைவானது உம் ஆட்சி நிலையானது |