Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   உன்னோடு உறவாடும் நேரம்  


உன்னோடு உறவாடும் நேரம்
என் பாடல் அரங்கேற்றம் ஆகும்
எந்நாளும் என் வாழ்வில் நீ செய்த நன்மை
நாள்தோறும் நான் பாடும் கீதம்

பலகோடி பாடல்கள் நான் பாட வேண்டும்
மன வீணை உனை வாழ்த்த வேண்டும்
ஒளி வீசும் தீபங்கள் நீயாக வேண்டும்
இமையோரம் நின்றாட வேண்டும்
இதழோர ராகம் உன் ஐpவ கானம்
அருட்தேடும் நெஞ்சம் உன் பாத தஞ்சம்
மனமே மனமே இறையோடு பேசு

கல்வாரி வாக்குகள் வாழ்வாக வேண்டும்
வாழ்வே உன் கதியாக வேண்டும்
அலை மோதும் எண்ணங்கள் நீயாக வேண்டும்
வினை தீர்க்கும் மருந்தாக வேண்டும்
மணியோசை நாதம் நான் கேட்ட காலம்
வான் தந்த வேதம் தேனாகும் கோலம்
உயிரே இறையோடு பேசு


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்