திருவிருந்துப்பாடல்கள் | தாயின் மடி போன்று |
தாயின் மடி சாய்ந்து - பால் பருகும் சேயினைப்போல் நானும் உன் விருந்தில் - மனம் நிறைய ஏங்குகின்றேன் இயேசுவே உன் இரசத்துளி இதயம் இனிக்கும் பனித்துளி நான் வாழும் காலமெல்லாம் உனைப் பருகி அகமகிழ்வேன் உயிர் வேதம் சுமந்திடுவேன் வானம் நீ இறங்கி வந்து வாழ்வின் உணவாகினாய் தானம் நான் கேட்டு நின்றேன் அன்பின் அமுதூட்டினாய் உந்தன் மேசையின் கீழ் விழும் துண்டு அது போதும் உந்தன் பந்தியிலே சிறு ஆறும் அது போதும் நான் வாழும் காலமெல்லாம் உனைப் பருகி அகமகிழ்வேன் உயிர் வேதம் சுமந்திடுவேன் கானல் நீரை நானும் நம்பி காலம் வீனானதே கண்டுகொண்டேன் உயிரின் ஊற்றை இயேசுவே நான் உன்னிலே உந்தன் அடியோரம் கொஞ்சம் இடம் போதும் உந்தன் கரம் பிடித்தே நடை பயிலும் வரம் போதும் நான் வாழும் காலமெல்லாம் உனைப் பருகி அகமகிழ்வேன் உயிர் வேதம் சுமந்திடுவேன் |