திருவிருந்துப்பாடல்கள் | ஒளியே வா உயிரே வா |
ஒளியே வா உயிரே வா அருளே வா அன்பே நீ வா - ஒளியே உயிரே அருளே அன்பே நீ வா அன்பென்றால் விலையென்ன எனக்கேட்கும் கலிகாலம் கண்முன்னே நான் காண்கின்றேன் பணம் ஒன்றே பலமாகும் மற்றெல்லாம் பின் ஆகும் அவலங்கள் நான் காண்கிறேன் அன்பே என் மூச்சாகணும் அதுவே என் பேச்சாகணும் குணம் பார்க்கும் மனம் பூக்கணும் பணம் பார்க்கும் நிலை போக்கணும் அருளும் நீ பொருளும் நீ அனைத்தும் நீ என் நெஞ்சம் வா வா பொருள் தேடி அலைந்தோடி அருள் நீங்கி மனம் வாடி இருள் ஆளும் நிலை காண்கிறேன் உண்மைக்கும் நேர்மைக்கும் உறவுக்கும் பகிர்வுக்கும் குழி தோண்டும் நிலை காண்கிறேன் தீமைகள் ஒழிந்தாகணும் நன்மைகள் நிலையாகணும் எங்கெங்கும் ஒளி ஆகணும் உன்னருள் நிறைவாகணும் அருளும் நீ ஒளியும் நீ உயிர் ஊட்டும் உணவே நீ வா வா |