திருவிருந்துப்பாடல்கள் | மண்ணாளும் மன்னா |
மண்ணாளும் மன்னா என் மனதாளவா - உன் கண்ணாக எனைக் காக்கும் இமையாக வா இருள் சூழ்ந்த உலகில் ஒளியாக வா அருள் தேடும் நெஞ்சில் வரமாக வா உயிர் மூச்சாக என்னில் வாழ என் இயேசு எழுவீரே எங்கெங்கு பார்த்தாலும் இனத்தாலும் மொழியாலும் குழப்பங்கள் நான் காண்கின்றேன் என் கரம் பிடித்து உடனிருக்கும் தாய்போல ஒரு உயிரை நான் தேடி அலைகின்றேனே தாயாக நீ வந்தாயே என்றும் மாறாத அன்பே தாயே மகனாக எனை ஏற்றாயே - நான் இருக்கின்றேன் நட என்றாயே நீ வந்தாலே போதும் புது ஆற்றல் நான் பெறுவேன் என் உயிரில் உன் உயிர் இருக்கும் அலையாக மகிழ்ந்தாடுவேன் இதழாக எனைச் சூழ்ந்தோர் முள்ளாக இருக்கின்றாய் என்றெண்ணி நான் வாழுகிறேன் - என் இதயத்தின் உறவாக நீ வந்தபோது முள்ளானோர் மலரானதே உனைத் தாங்கும் மூங்கில் மரம் அதைக் காயங்கள் எனத் தூக்குமோ வiயாகி காற்றைப்போல் புது இசையாக்க பிறர் போற்றுமோ நீ வந்தாலே போதும் புது ஆற்றல் நான் பெறுவேன் என் உயிரில் உன் உயிர் இருக்கும் அலையாக மகிழ்ந்தாடுவேன் |