திருவிருந்துப்பாடல் | கல்வாரித் தென்றலே வா |
கல்வாரித் தென்றலே வா கனிவாகத் தேற்றிட வா கல்வாரித் தென்றலே வா பொங்கும் பாவக் கனல் போக்க எங்கும் தேவ அருள் வீச - 2 பெரும் யோர்தான் ஆற்றினிலே திருமுழுக்கானீரே சிறுகல்வாரி மலைதன்னிலே திருப்பலி ஆனீரே திருமறையின் உயிரே வா அருட்கொடையின் தென்றலே வா செங்கடல் கடந்திட சீர்பாதை ஆனீரே பாவக்கடல் கடந்திட பலிப்பொருள் ஆனீரே செங்கடல் தென்றல் காற்றதுவே கல்வாரித் தென்றல் ஆனதுவே கடும் கோடை காலத்தில் கல்வாரி சென்றீரே கோடையில் வாடையான குளிர் தந்திட வந்தீரே பாவம் என்னும் கோடை போக்க பாடி வரும் தென்றலே வா |