Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள்   இது என் உடல் உன் உணவாகட்டும்  

இது என் உடல் உன் உணவாகட்டும்
இது என் இரத்தம் உன் பானமாகட்டும்
வாக்கு தந்த தேவா தேடிவந்த இறைவா
தகுதி இல்லாத ஏழை நான்
ஒரு வார்த்தை சொல்லும் குணம் பெறுவேன் (2)

உலகின் ஒளி அது நான் என்றீர்
உண்மையின் வழி அது என்னில் என்றீர்
வாழும் காலம் வரையில் என்னுடன் இருப்பீர்
வரையில்லாத அன்பால் இன்னுயிர் தந்தீர்
இயேசுவே உன் நினைவாக செய்திடுவேன் -2

சுமை கொண்டோரை நீர் வரவேற்றீர்
சுகம் காணவே உம் கரம் தந்தீர்
மீண்டும் உந்தன் வரவை எதிர்நோக்கியே
ஆருயிராய் உம்மையே இதயம் ஏற்கின்றேன்
இயேசுவே உன் திருவிருந்தில் மகிழ்கின்றேன் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்