திருவிருந்துப்பாடல்கள் | இதய தாகம் இருப்பார் வருக |
இதய தாகம் இருப்பார் வருக இதயம் குளிர ஈவேன் நிறைய தாகம் இருப்பார் வருக குளிர ஈவேன் நிறைய சுமந்து வந்திடும் சீலோத் தண்ணீர் உமக்கு இருந்தும் உதவாத் தாகம் - 2 உவந்து ஊற்றும் ஊற்றுத் தண்ணீர் உவமை யாவும் உரைப்பீர் உண்மை பிறந்து வந்து பரனிடம் வந்தே திறந்த உள்ளம் நிறைவு கொள்வீர் - 2 உடலின் தாகம் உலகம் அறியும் உளத்தின் தாகம் எவரும் அறியார் பொருளும் பொன்னும் போக்காத் தாகம் இதயம் தேடும் இறைவன் நானே - 2 வருக வருக வளமாய் பெறுக பெருகும் இன்பம் பெற்றே வாழ்க |