Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   என்னில் வா என்னில் வா  


என்னில் வா என்னில் வா என்னிலே நீ வா - 2
உன்னை நான் காணவா என்னை நீ காக்கவா
வண்ண ஒளியாகவா விண்ணில் வழியாகவா
எந்தன் நினைவாகவா என்னில் உறவாடவா
என்னில் வா என்னில் வா என்னிலே வா - 2

உனது ஒளிகொண்டு என்னிலே வா
உலகாளும் தேவா என்னிலே வா
உதயம் நான் காண என்னிலே வா
உறவாடும் தேவா என்னிலே வா
எனையாள என்றும் என்னிலே வா
என்னோடு இருக்க என்னிலே வா
உணவாக வா வா வா
உறவாட வா வா வா
உயிர்வாழ உயிரே நீ வா - 2
என்னில் வா என்னில் வா என்னிலே வா 2

மன இருள் அகற்றிட என்னிலே வா
மகிழ்வோடு இருக்க என்னிலே வா
வளமோடு வாழ என்னிலே வா
வரமருள் பொழிந்திட என்னிலே வா
இகமதில் மலர்ந்திட என்னிலே வா
அகமதில் ஒளிர்ந்திட என்னிலே வா
உணவாக வா வா வா
உறவாட வா வா வா
உயிர்வாழ உயிரே நீ வா - 2
என்னில் வா என்னில் வா என்னிலே வா - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்