திருவிருந்துப்பாடல்கள் | என் வாழ்வில் இயேசுவே வருவாயா |
என் வாழ்வில் இயேசுவே வருவாயா என் உயிராய் எப்போதும் வாழ்வாயா காலையில் கண்விழிக்க சூரியனாய் வருவாயா கனவு காண்கையிலே வான்நிலவாய் வருவாயா நண்பனோடு மகிழ்கையிலே நானிருப்பேன் - உன் நண்பனோடு மகிழ்கையிலே நானிருப்பேன அனைவருமே விலகினாலும் அதன் பின்னும் நானிருப்பேன் துன்பங்களால் துடிக்கும்போது தாங்கிட வருவேன்; மறைந்துபோன போதும் மறுவிடியலாக நானிருப்பேன் புன்னகைக்குப் பின்னாலே நானிருப்பேன் - உன் புன்னகைக்குப் பின்னாலே நானிருப்பேன் துணையில்லாமல் இருக்கும்போது நிழலாக நான் தொடர்வேன் காலமெல்லாம் கருவாக இதயத்தில் இருப்பேன் வரண்டு போன போதும் துணைத் தென்றலாக இருப்பேன் |