Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

திருவிருந்துப்பாடல்கள்  என் சுவாசக்காற்றே என் ஜீவன் தேடும் தெய்வம்  

என் சுவாசக்காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என்னுள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே நீ என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமே நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்

என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உன்னைப்போல் நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே - 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்