திருவிருந்துப்பாடல்கள் | என் மன்னவா என்னில் இறங்கி வா |
என் மன்னவா என்னில் இறங்கி வா தினமும் எந்தன் உணவாய் என்றும் என்னில் மகிழ வா ஆன்ம ஜோதியே என்றும் என்னில் மகிழ வா பாட்டிசைத்துப் பாட வந்தேன் உந்தன் மனம் மகிழுதே காலமெல்லாம் காத்திருந்தேன் உந்தன் சொந்தம் தேடுதே என்னுயிரே என்னுறவே எந்தன் உள்ளம் எழுந்து வா ஆ.ஆ..ஆ. என்னுயிரே எழுந்து வா தினம் தினம் என்னில் வா என்னில் வாழ வா உயிரில் கலந்து வா நெஞ்சமெனும் கோவிலிலே தீபமாய் எழுந்து வா தஞ்சமென்று ஓடி வந்தேன் கரம் தந்து அணைக்க வா அன்புருவே ஆரமுதே அன்பர் எம்மில் எழுந்து வா ஆ.ஆ..ஆ. அன்புருவே எழுந்து வா தினம் தினம் என்னில் வா என்னில் வாழ வா உயிரில் கலந்து வா |