அன்பில் கனிந்து வந்த |
அன்பில் கனிந்து வந்த அமுதே சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே உனக்காக நான் ஏங்கி தவித்தேன் எனில் வாழும் உணவாக அழைத்தேன் விருந்தாக வரும் தேவன் உனைக்காண்கையில் வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே மறந்தாலும் மறவாத உனதன்பையே இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா இசையோடு தமிழ்சேரும் சுவை காணவே உனைதேடி உனை நாடி நிறைவாகுவேன் உன்னில் உருமாறுவேன் என்னோடு நீ கொண்ட உறவானது எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது என் மீது நீ கொண்ட அன்பானது அது தினம் தோறும் பலியாக அரங்கேறுது இறைவா என் இறைவா என் அகம் வாருமே இதயம் என் இதயம் உன் அருள் காணுமே இறையாட்சி சம பந்தி உருவாகுமே மண்ணில் உருவாகுமே |