Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் விருந்து கொண்டாட  

விருந்து கொண்டாட திரு விருந்து கொண்டாட
இயேசு அழைக்கிறார் - நம் நேசர் அழைக்கிறார்
இறையாட்சி விருந்து நம்மை உறவாக்கும் விருந்து - இது
இறையாட்சி விருந்து நம்மை உறவாக்கும் விருந்து

திரும்பி வந்த மகனுக்காக தந்தை தந்த விருந்து
திருந்தி வரும் மாந்தருக்காய் தேவன் தரும் விருந்து
வருந்தி சுமை சுமப்போரை இளைப்பாற்றும் விருந்து
வானின்று இறங்கி வந்து வாழ்வருளும் விருந்து
வாழ்வருளும் விருந்த இது வாழ்வருளும் விருந்து

இறைவாக்கை வாழ்வாக்க ஆற்றல் தரும் விருந்து
இருள் சூழும் பயணத்திலே ஒளியூட்டும் விருந்து
இலவசமாய் இயேசு தரும் இதய அமைதி விருந்து
இறவாத வாழ்வு தரும் இணையில்லாத விருந்து
இணையில்லாத விருந்து இது இணையில்லாத விருந்து














 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்