Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள்  

விருந்து அன்பின் விருந்து
விரும்பியே அழைக்கிறார் இயேசு
விரைந்து வந்து அருந்திட
விரும்பும் மாந்தாரே
வாரீர் வாரீர் வாரீரோ
வந்து மீட்பர் இயேசுவை காணீரோ

உயிரின் உணவாய் வந்தாய்
உம்மைப் வாழ்வோர் இறப்பையும் வெல்வாய்
என்னுள் கோவில் கொண்டிடுவாய்
என்னுடன் ஒன்றாய் கலந்திடுவாய்
உந்தன் வாழ்வை வாழ்ந்திட
உயிரின் ஊற்றாய் என்னுள் வந்திடுவாய்
மகிழ்வோம் மகிழ்வோம் இயேசுவோடு
அன்பை பகிர்வோம் பிறரோடு
வாரீர் வாரீர் வாரீரோ
வந்து மீட்பர் இயேசுவை காணீரோ

கல்லான இதயம் கரைய
கனிந்த அன்பு எங்கும் தேட
வாழ்வில் பகைமை மறைந்திடவே
இயேசுவே என்னில் வாருமே
என்னை காக்க வந்தாயே
உலகம் வாழ்ந்திட என்னை தருவேனே
மகிழ்வோம் மகிழ்வோம் இயேசுவோடு
அன்பை பகிர்வோம் பிறரோடு
வாரீர் வாரீர் வாரீரோ
வந்து மீட்பர் இயேசுவை காணீரோ












 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்