Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் வருக வருக வருக  


நானே வானினின்று இறங்கி வந்த உணவு இதை யாராவது உண்டால்
(அவர் என்றுமே வாழ்வார்) - 2

வருக வருக வருக வானின் திருவுணவே
எம்மை வாழ வைக்கும் என்றும் இன்ப திருவிருந்தே - 2
உன்னில் நான் என்றும் வாழ
உயிர் மூச்சாய் உம்மில் நான் கலந்திட -2
வருவாய் என்னில் வருவாய் அருள் வரங்களை நிதமும் தருவாய்
அழியா உணவே வாருமே அகம் என்னில் உறைந்திட வாருமே
உயிராய் என்னில் வாருமே என்றும் நிலைத்திட வாருமே

இருள் நீக்கும் ஒளியாக என் வாழ்வில் வரவேண்டும்
கனி கொடுக்கும் செடியாக உன்னில் நான் இணைந்திட வேண்டும் 2
அழியா உன் வார்த்தைகள் என் வாழ்வின் ஆதாரமே
அனைத்திலும் உன் கரமே எனைத்தாங்கும் நங்கூரமே
உயிராய் வா உணவாய் வா என்னில் என்றும் வாழ்ந்திட வா-2


உம்மோடு நான் இருந்து உமக்காக பணி செய்து
உமைப்போல நான் வாழ்ந்து அன்பு செய்ய வரம் வேண்டும் - 2
நிலைவாழ்வு நான் பெறவே என் மனதில் நீ வருவாய்
நாளெல்லாம் நம்பிக்கையில் தளராமல் வாழ வைப்பாய்
இறைவா வா இதயம் வா உந்தன் அன்பில் வாழ்ந்திட வா -2









 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்