திருவிருந்துப்பாடல்கள் | வானவர் அருந்தும் விருந்திது |
வானவர் அருந்தும் விருந்திது மன வாசல் தேடி இறங்குது மனிதமும் புனிதமும் இணைந்தது இறைக்கருணையும் அருளும் கலந்தது அள்ள அள்ள குறையாத அன்பிது மெல்ல மெல்ல என்னில் உயிர் ஆனது குருதியிலே......... இறையுடலே........ இதயங்களே தேடுதோ......... குருதியில் நனைந்திட்ட இறைவனின் உடலில் இணைந்திட இதயங்கள் தேடுதோ சிலுவையில் உயிரினை துறந்திட்ட தேவன் குருதியும் மனிதனில் பாயுதோ கல்வாரி மலை தந்த காட்சியதை ஒரு கணநேரம் கண் முன்னே நிறுத்தியதோ நெஞ்சுக்குள்ளே வந்தாளும் கருணையோ தஞ்சம் வந்த தெய்வீக மழையிதோ புழுதியிலே...... பூ மழையே...... பூமியின் சுவாசமே..... புழுதியில் விழுந்த விதைகளின் மேலே ஒரு துளி மழையென நீ வந்தாய் இருளிலும் துயரிலும் அழுதிடும் பொழுதில் இதயத்தின் காயங்கள் ஆற்றினாய் உடலாலே நான் செய்த பாவங்களை உன் உயிருக்குள் வலியாக உணர்ந்தாயே இந்நாளில் எந்தன் உள்ளம் வாருமே எந்நாளும் உன்னருளில் வாழுவேன் |